search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள்"

    • தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி.சுதீர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சிக்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் சரியாக ஊதியம் வழங்க வில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியா ளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி.சுதீர் சாலை மறிய லில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இன்று காலை நடந்த இந்த திடீர் சாலை மறியலால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது.

    • தூய்மை பணியாளர்களுக்கு புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ரூ1 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் சிரமத்தை போக்க நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவுரிதிடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து ரூ1 கோடியே 67, லட்சம் ரூபாய் மதிப்பிலான 23, இலகுரக வாகனத்தின் சாவியினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நகராட்சி ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தனர்.

    • தலைமைச்செயலகத்தின் எதிரில் திடீர் சாலை மறியலில் பெண்கள் ஈடுபட முயன்றனர்.
    • அரசாணையை காணவில்லை என்று கூறிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு மேல் நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும், ஓய்வூதியம் வழங்க கோரியும், தலைமைச்செயலகத்தின் எதிரில் திடீர் சாலை மறியலில் பெண்கள் ஈடுபட முயன்றனர்.

    தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்து கடந்த 9-5-12-ம் ஆண்டு 614 பேர்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான நபர்களுக்கு பலன்கள் கிடைத்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 20 பேருக்கு பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இது தொடர்பான அரசாணையை காணவில்லை என்று கூறிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் கோட்டை முன்பு பரபரப்பாக காணப்பட்டது.

    • தூய்மை பணியாளரில் ஒருவரை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.
    • தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டா டப்பட்டது.

    இந்நிலையில் சீர்காழி நகராட்சி 14வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தனது வார்டில் சுதந்திர தினத்தையொட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து தூய்மை பணியாளரின் ஒருவரை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.

    தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சி சீர்காழி பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    • மாத சம்பளம் 4 அல்லது 5ந்தேதிக்குள் வந்து கொண்டிருந்தது. தற்போது 11ந் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை.
    • தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்,14 வது வார்டு உறுப்பினர் ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் சுமார் 56,000 மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 36, ஒப்பந்த அடிப்படையில் 181 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தனித்தனியாக பிரித்து வாங்குவதற்கு தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாள்தோறும் 18 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பல கட்டங்களாக போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பல்லடம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி, பல்லடம் பேருந்து நிலையத்தில் இன்று காலை அனைவரும் ஒன்றாக கூடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.

    இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

    மாத சம்பளம் 4 அல்லது 5ந்தேதிக்குள் வந்து கொண்டிருந்தது. தற்போது 11ந் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை. இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் கடும் அவதிப்படுகிறோம். ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் கொடுக்கும் சம்பளத்தையும் சரியாக தருவதில்லை. எனவே இதனை கண்டித்து வேலைநிறுத்தம் செய்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்,14 வது வார்டு உறுப்பினர் ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்தனர். தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல்லடம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கின.

    தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 145 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினசரி கூலியாக ரூ.440 வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.540, கோயம்புத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ. 570 வழங்கப்படுகிறது. அதுபோல் கூலி வழங்க வேண்டும். கூலியை சரியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை தாராபுரம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள நகராட்சிகள் கூடுதல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக வாகனங்களில் சென்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தால் தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.
    • காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியில் மொத்தம் 46 ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் தினந்தோறும் காலை முதல் மதியம் வரை தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களில் பெரும்பாலானோர் கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து வருகின்றனர். இதனால் காலை 6 மணிக்கே அவர்கள் வேலைக்காக வீட்டில் இருந்து புறப்படும் நிலை உள்ளது. இதன்காரணமாக பலர் காலை உணவை சமைத்து கொண்டு வரமுடியாமலும், பலர் சரிவர காலைஉணவு சாப்பிடாமலும் இருந்தனர்.

    இதனை அறிந்த 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கவீ. கணேசன் தூய்மை பணியாளர்களின் பசியை போக்க ஏற்பாடு செய்து உள்ளார். தூய்மை பணியா ளர்கள் 46 பேருக்கும் தினமும் இலவசமாக காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், வடை வழங்கப்படுகிறது. இதற்காக அவர் காலடிப்பேட்டையில் உள்ள தனது வார்டு கவுன்சிலர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் ஏற்பாடு செய்து உள்ளார். அருகில் உள்ள ஓட்டலில் இருந்து டிபன் கொண்டு வரப்படுகிறது. காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை காலை உணவை சாப்பிட 46 தூய்மை பணியாளர்களும் சுழற்சி முறையில் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். காலை உணவுக்காக தினமும் ரூ.1800 செலவு செய்து வருகிறார்.

    மேலும் காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாலும் வழங்கப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கவுன்சிலர் கவீ. கணேசனிடம் கேட்ட போது, தொலைதூர இடங்களில் இருந்து வரும் தூய்மை பணியாளர்கள் காலை உணவு தயார் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் பலர் காலை உணவு சாப்பிட முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கு காலை உணவைச் செய்யவோ, வாங்கவோ போதிய பணம் இல்லை.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவாக இட்லி, பூரி, வடகறி, பொங்கல், வடை மற்றும் காபி போன்றவற்றை சொந்த செலவில் வழங்கி வருகிறேன். வார்டு அலுவலகத்தில் காலையில் டீ அல்லது காபி தயாரிப்பதற்காக அவர்களுக்கு கியாஸ் ஸ்டவ் மற்றும் டம்ளர் உள்ளது.

    ஒப்பந்ததாரர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு காலை உணவை வழங்குவதில்லை. தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காலை உணவை வழங்க வேண்டும், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசி உள்ளேன். தூய்மை பணியாளர்களின் பசியாற உணவு வழங்குவது மன நிறைவை தருகிறது என்றார்.

    • தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.

    முதுகுளத்தூர்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி பேரூராட்சிகள்ஆகியவற்றின் தூய்மை பணியாளர்கள் மற்றும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 14 பொருட்கள் கொண்ட சமையல் பொருட்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • இதில் 71 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

        ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 71 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    71 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் ஒப்பந்த நிறுவனம் கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்கு செல்லாமல் நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடந்த 18 மாதங்களாக இதற்கு முன்னால் இருந்த நிறுவனமும் வருங்கால வைப்பு நிதி பணம் முறையாக செலுத்தவில்லை என்று தெரிவித்தனர்.

    2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளர், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் எங்களுக்கு சம்பளம் போடாமல் போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
    • சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சியில் தூய்மை பணிகள் செய்து வரும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மாங்கனி தலைமையிலான மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள் செலுத்தல், ரத்த பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கினர். இந்த முகாமை நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், திருமங்கலம் நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன் சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், ஜமீலா பவுசியா, சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி இன்று தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நகர மன்ற தலைவர் ஊதியத்தை உடனடி யாக வழங்குவதாக கூறிய நிலையில் துப்புரவு அலுவலர் செந்தில்குமார் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் நல சங்க சட்ட ஆலோசகர் ஜெயராஜ் அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    • கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் புதிய நிறுவனத்திடம் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
    • ஊதியம் வழங்க வலியுறுத்தி 2 நாட்களாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி யில் கடந்த பல ஆண்டுகளாக தூய்மை பணிகளுக்காக தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

    கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் பழைய ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டு புதிய நிறுவனத்திடம் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் 30 வார்டுகளில் குப்பைகளை மட்டுமே அள்ளிவிட்டு வாறுகால் அள்ள நகராட்சி பணியாளர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் தூய்மை பணிகளுக்கு முறையாக பணியாளர்களை நியமிக்காமல் நகரில் பல பகுதிகளில் குப்பைகள் சேர்ந்து வந்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்தநிலையில் அந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு ஜூன் மாதம் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் ஊதியம் வழங்க வலியுறுத்தி 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, தாசில்தார் பாபு ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடம் பேசி ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

    அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். ராஜா எம்.எல்.ஏ. தலையிட்டு தூய்மை பணியாளர்கள் பிரச்சினையை முடித்ததால் இனி சங்கரன்கோவில் நகரில் தூய்மை பணிகள் தங்கு தடை இன்றி நடக்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததால் சிரமமடைந்துள்ளனர்.
    • அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் பணிபுரியும் ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் திண்டாடி வருவதாக கூறப் படுகிறது.

    இது குறித்து ஊராட்சி தலைவர் பவுசியா பானு கூறியதாவது:-

    பனைக்குளம் ஊராட்சி துணைத் தலைவர் திடீரென இறந்து விட்டதால், அவ ருக்கு பதிலாக புதிய ஊராட்சி தலைவரை ஊராட்சி மன்ற கூட்டத்தில் தேர்வு செய்து அதற்கான தீர்மானத்தை மாவட்ட நிர் வாகத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.

    இந்த நிலையில் அதற் கான அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தால் ஊராட்சி நிதியில் இருந்து வங்கி கணக்கில் பணம் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் பல்வேறு பொதுச் செலவுகளுக்கும் பணம் எடுக்க முடியாமல் சொந்த பணத்தை செலவழித்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண் டும் என்று பனைக்குளம் சமூக ஆர்வலர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:- துணைத் தலைவர் வங்கியில் கையெ ழுத்திடும் அங்கீகாரத்திற் கான தபால் மாவட்ட கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கபடுகிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

    ×